கோட்டையில் தேசியக்கொடி ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கருணாநிதி! #Karunanidhi50Sponsored சுதந்திர திருநாளில் மாநில தலைநகரங்களில் தேசியக்கொடியை ஏற்றும் உரிமையை மாநில முதல்வர்களுக்கு பெற்றுத் தந்தவர்   அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி.

ஒவ்வொரு ஆண்டும் டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று பிரதமரும், குடியரசுத் தினமான ஜனவரி 26 அன்று ஜனாதிபதியும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்துவது வழக்கம். அதே வேளையில் மாநில தலைநகரங்களில் இந்த இரு நாள்களிலுமே அந்தந்த மாநில ஆளுநர்களே கொடி ஏற்றுவது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில், அண்ணாவின் மறைவைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சராக பதவியேற்ற கருணாநிதி, சுதந்திர தினத்தில் டெல்லியில் பிரதமர் தேசியக்கொடியை ஏற்றுவதுபோல் அந்தந்த மாநிலத் தலைநகரில் அந்தந்த மாநில முதலமைச்சர் தேசியக்கொடியை ஏற்றுவதுதான் பொருத்தமாக இருக்கும் எனவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களுக்கு இந்த உரிமையை வழங்க வேண்டும் எனவும் கருணாநிதி வலியுறுத்தி வந்தார்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதியும், டெல்லிக்குச் செல்லும்போதெல்லாம் நேரில் வலியுறுத்தியும் வந்தார் கருணாநிதி. இதைத்தொடர்ந்து 1974-ம் ஆண்டு சுதந்திர தின நாளில் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதலமைச்சர்களே தேசியக் கொடியை ஏற்றலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, 1974-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டையில் முதன் முறையாக தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். அந்த விழாவுக்கு அனைத்துக்கட்சித் தலைவர்களையும் அழைத்து உரையாடி மகிழ்ந்தார் கருணாநிதி.

Sponsored


ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தாலும் அவர் ஆட்சி செய்யும் மாநிலத்தில் நாட்டின் சுதந்திர தினவிழாவின்போது நாட்டின் கொடியை ஏற்ற முடியாமல் இருந்து வந்த நிலையை தனது வலுவான கோரிக்கையால் சாதித்துக் காட்டியதன் மூலம் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தேசியக்கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்தார் கருணாநிதி.

Sponsored
Trending Articles

Sponsored