`பழைய கம்பீரக் குரலில் பேச வேண்டும்' - கருணாநிதிக்காக உருகும் விஜயகாந்த்!Sponsored``தி.மு.க தலைவர் கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன்'' என தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வயதுமூப்பின் காரணமாக உடல் நலிவு ஏற்பட்டுள்ளது. மேலும், சிறுநீரகத் தொற்றுக் காரணமாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என நேற்று மாலை காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அறிக்கை வெளியான உடன் தொண்டர்கள் அவர் வீட்டு முன்பு குவிய ஆரம்பித்தனர். மேலும், அரசியல் தலைவர்கள் கோபாலபுரம் இல்லம் சென்று அவரின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். இதேபோல், கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் எனக் கூறி பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். 

Sponsored


அந்தவகையில், கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன் என தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற்று மீண்டும் பழைய கம்பீரக் குரலோடு தமிழ் வசனங்கள் பேசி தமிழகத்தில் மீண்டும் அரசியல் பணிகள் செய்ய, நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்க நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored