தமிழகத்தில் 19 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!Sponsoredதமிழகத்தில் 19 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 19 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி அறிவித்துள்ளார். சென்னையிலும் பல்வேறு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Sponsored


அதன்படி, தமிழக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த துரை, தற்போது மேற்கு சென்னை போக்குவரத்து (மேற்கு) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னைப் போக்குவரத்து (மேற்கு) துணை ஆணையராக உள்ள சிவகுமார் சென்னைப் பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட எஸ்.பியாக இருக்கும் பகலவன், வடசென்னை போக்குவரத்துக் காவல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். சென்னைப் போக்குவரத்து (வடக்கு) துணை ஆணையராகப் பதவி வகிக்கும் மகேந்திரன் தமிழ்நாடு சிறப்புக் காவல்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

Sponsored


ஐ.ஜி-யாக பதவி வகிக்கும் தினேஷ் மோடக், சென்னைக் குற்றப்பிரிவு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். எஸ்.பி நிஷா பார்த்திபர், சென்னை சி.பி.சி.ஐ.டி-3 எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். தற்போது சென்னை சி.பி.சி.ஐ.டி-3 எஸ்பி-யாக இருக்கும் பிரவேஷ்குமார் வேலூர் மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல்படையில் பதவி வகிக்கும் ராஜசேகர், சிறு படைகலன் சென்னைப் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். 

திருவாரூர் எஸ்.பி.யாக உள்ளா மயில்வாகனன் மயிலாப்பூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். மயிலாப்பூர் ஆணையர் சரவணா கடலூர் மாவட்ட எஸ்.பி யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னைப் பாதுகாப்பு பிரிவில் துணை ஆணையராக உள்ள சாம்சன், பூக்கடை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். பூக்கடை துணை ஆணையர் செல்வகுமார், கோவை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். 

கோயமுத்தூர் எஸ்.பி பா.மூர்த்தி ஈரோடு சத்தியமங்கலம் சிறப்பு எஸ்.பி-யாகவும், திருவள்ளூர் எஸ்.பி-யாக உள்ள சிபி சக்ரவர்த்தி திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி-யாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி பொன்னி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். கோவை துணை ஆணையராக உள்ள தர்மராஜன் சென்னை கியூபிரிவு சி.ஐ.டி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை கியூ பிரிவு துணை ஆணையர் விக்ரமன் திருவாரூர் மாவட்ட எஸ்.பி-யாக மாற்றப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட எஸ்.பி-யாக உள்ள விஜயகுமார் நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். Trending Articles

Sponsored