கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க நிர்மலா சீதாராமன் இன்று வருகை!Sponsoredதி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு வர இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வயதுமூப்பின் காரணமாக உடல் நலிவு ஏற்பட்டுள்ளது. மேலும், சிறுநீரகத் தொற்று காரணமாகக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையின்கூடவே வதந்திகளும் பரவத் தொடங்கியது. இதனால் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டின் முன்பு நேற்று இரவு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. கருணாநிதியின் உடல்நிலையை அறிந்துகொள்வதற்காகப் பல்வேறு கட்சியின் தலைவர்கள் கோபாலபுரம் வீட்டுக்கு விரைந்தனர். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விவரம் கேட்டனர். அதுபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் போன்றோரும் கருணாநிதியின் வீட்டுக்கு விரைந்து அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். கருணாநிதியின் உடல்நலம் குறித்து கவலைப்பட்ட தொண்டர்கள் அவரது வீட்டுக்குப் படையெடுக்கத் தொடங்கினர். இதையடுத்து, வீட்டைச் சுற்றி அதிக அளவிலான காவலர்கள் பாதுகாப்புக்காகப் போடப்பட்டனர். 

Sponsored


இந்நிலையில், நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்ற கருணாநிதியின் மகளும், எம்.பி-யுமான கனிமொழி, இன்று அவசரமாகச் சென்னை திரும்புகிறார் என்று தகவல் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் வர இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Sponsored
Trending Articles

Sponsored