`கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும்' - ஸ்டாலினிடம் நலம் விசாரித்த மோடி! #KarunanidhiSponsoredதி.மு.க தலைவர் கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

வயது முதிர்வின் காரணமாக தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சிறுநீரகத் தொற்றால் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்றும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அறிக்கை வெளியானது முதல் அவர் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவத் தொடங்கியது. இதனால் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தர தொடங்கினர். ஓ.பி.எஸ், திருமாவளவன், கமல்ஹாசன் என அனைத்து தலைவர்களும் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றனர். இதையடுத்து தொண்டர்கள் அவரது இல்லத்தை முற்றுகையிடத் தொடங்கினர். இதனால் கோபாலபுரம் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டுள்ளன.

Sponsored


கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் எனக் கூறி பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் கருணாநிதி உடல்நலம் குறித்து பிரதமர் மோடி ஸ்டாலின், கனிமொழியிடம் நலம் விசாரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் விசாரித்தேன். தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறேன். அவர் விரைவாக மீண்டு நல்ல உடல்நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். 

Sponsored


இதேபோல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலினை தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``தமிழ்கத்தின் முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான கருணாநிதி விரைவில் பூரண நலம் பெற்று பொதுவாழ்க்கைக்கு வர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.Trending Articles

Sponsored