நீதிமன்ற உத்தரவை மதிக்காத பெண் காவலருக்கு ஒரு லட்சம் அபராதம்!



Sponsored



குடும்ப வழக்கில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட பெண் காவலருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும், அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் செல்வம். இவரின் கணவர் செல்வராஜ்.  இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால்,  விருதுநகர் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்துவருகிறது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தனது மகளை வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னுடன் இருப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று செல்வராஜ் கேட்டுக்கொண்டதால், வாரந்தோறும் மகளை அவரின் தந்தையுடன் அனுப்பிவைக்க கோர்ட் உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்தார் செல்வம்.

நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்த பின்னர், கடந்த 21-ம் தேதி காவலர் செல்வம் தன் மகளுடன் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்துக்கு வந்து, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மகளை அவரின் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும். இதை சங்க நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், செல்வம் அவரின் மகளை அழைத்துக்கொண்டு வரவில்லை. தொலைபேசியில் தொடர்புகொண்டபோதும் அழைப்பை ஏற்கவில்லை. அன்று மதியம் 2 மணி வரை அவருக்காகக் காத்திருந்தனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பெண் காவலர் செல்வம் நடந்துகொண்ட தகவல் நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ஒரு அரசு ஊழியர். ஆனால், கோர்ட் உத்தரவை அவமதித்துள்ளார். எனவே, அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை வழக்கின் நகல் கிடைத்த 2 வாரத்தில் தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும். அவர்மீது மாவட்ட போலீஸ் காவல்துறை கண்காணிப்பாளர் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் 7-ம் தேதி நீதிமன்றத்தில்  தெரிவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored