`கலாம் சமாதியில் இப்படி நடக்கலாமா?’ - டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள்மீது பாயும் பொதுமக்கள்Sponsoredமறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்துக்கு அஞ்சலிசெலுத்த வந்த டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள், கலாமை அவமரியாதை செய்யும் வகையில் நடந்துகொண்டது அங்கு வந்திருந்தவர்களை முகம்சுளிக்கச் செய்தது.


 

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பேய்க்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்துக்கு இன்று ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அஞ்சலிசெலுத்துவதற்காகப் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள், கலாமின் நினைவிடத்துக்குச் சென்று அமைதியான முறையில் அஞ்சலிசெலுத்தி வணங்கிச் சென்றனர்.

இந்நிலையில், பகல் 12 மணியளவில் கலாம் நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்துவதற்காகத் தன் ஆதரவாளர்கள் புடைசூழ அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வந்திருந்தார். தினகரன் அஞ்சலி செலுத்தும்போது, அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதற்காக கட்சிக்காரர்கள் நூற்றுக்கணக்கானோர் முன்னதாக நினைவிடத்துக்குள் குழுமியிருந்தனர். இந்நிலையில், நினைவிடத்தின் பிரதான வாயில் வழியாக அஞ்சலிசெலுத்த வந்த தினகரனுடனும் நூற்றுக்கணக்கானோர் கும்பலாக நுழைந்தனர். இதனால், அங்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போலீஸார் மற்றும் தனியார் நிறுவன பாதுகாப்புப் பணியாளர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில், தினகரனே அஞ்சலிசெலுத்த முடியாத அளவுக்கு அவரது கட்சியினர் கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைச் சூழ்ந்தனர்.

Sponsored 

Sponsored


 நினைவிடத்தின் நுழைவு வாயில் வரை மட்டுமே காலணிகள் அனுமதிக்கப்படும். ஆனால், தினகரனுடன் வந்த அவரது ஆதரவாளர்கள்  அதைப் பொருட்படுத்தாது, கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் வரை காலணிகளை அணிந்தபடி வந்தனர். மேலும், தினகரனுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என முண்டியடித்த அவர்கள், கலாமின் நினைவிடத்தில் செய்யப்பட்டிருந்த பூக்களை எல்லாம் மிதித்து அலங்கோலப்படுத்தினர். இது மட்டுமில்லாமல், அமைதியாக அஞ்சலி செலுத்தவேண்டிய நினைவிடத்தில், வாழ்க கோஷம் எழுப்பியும், விசில் அடித்தும் அநாகரிகமாக நடந்துகொண்டனர்.  தினகரன் ஆதரவாளர்களின் இந்தச் செய்கைகளால் அங்கு மாட்டப்பட்டிருந்த கலாமின் ஆளுயர போட்டோ, சுவற்றில் இருந்து விழும்நிலை உருவானது. அதைக் கவனித்த ஊழியர்கள், அந்தப் படத்தை பாதுகாத்தனர். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நினைவிடத்துக்குள் நடந்த இந்த அவமதிப்புச் செயல்களைக் கண்ட நினைவிடப் பொறுப்பாளர்களும், அஞ்சலிசெலுத்த வந்திருந்த பொதுமக்களும் மன வேதனை அடைந்தனர்.Trending Articles

Sponsored