`சேலத்தைப் பற்றிய ஒவ்வொரு கேள்வியும் ஆச்சர்யமாக இருந்தது’ - மாணவிகள் பேட்டிசேலம் பெயர் உருவாகி  150 வது ஆண்டை முன்னிட்டு, 'சேலம் 150 நம்ம சேலத்தை நல்லா தெரிஞ்சுக்கணும்' என்ற தலைப்பில் சுட்டி விகடன், ரோட்டரி க்ளப் ஆஃப் கேலக்ஸி மற்றும் இன்டெக் இணைந்து சேலம் 150 இன்ஃபோ புக் மாணவ, மாணவிகளுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே வழங்கப்பட்டு அதிலிருந்து போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு அரசுப் போட்டி தேர்வைப்போல ஓ.எம்.ஆர் ஸீட் மூலம் பதில்கள் பெற்றப்பட்டன. சேலம் மாவட்டம் முழுவதும் 70 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 7,000-த்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு இத்தேர்வு எழுதினார்கள். இந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 29-ம் தேதி சேலம் விஜயராகவாச்சாரியார் ஹாலில் சிறப்பான பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

Sponsored


இத்தேர்வு நடைபெறும் சேலம் மனக்காடு காமராஜர் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் இத்தேர்வு எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேசினோம்.

Sponsored


மாணவி தேவி, ''எங்கள் ஊரு சேலம் கன்னங்குறிச்சி. எங்கள் மாவட்டத்தைப் பற்றி, நான் விளையாடும் தெருவைப் பற்றி, எங்க வீட்டைச் சுற்றி என்னென்ன சிறப்புகள் இருக்கின்றன என்பதையெல்லாம் இதில் கேட்டிருக்கிறார்கள். அதனால் இது எனக்கு வழக்கமான தேர்வாகவே தெரியவில்லை. ஒவ்வொரு கேள்வியும்
ஆர்வமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. கடந்த வாரம் விகடன் சார்பாக வழங்கப்பட்ட சேலம் 150 இன்ஃபோ புக் படித்தேன். இந்தப் புத்தகத்தை எங்க டீச்சர், அப்பா, அம்மா எல்லோரும் பார்த்து, படித்து வியந்ததோடு 'சேலத்தில் வசிக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரிந்துகொள்ள வேண்டிய அற்புதமான தகவல்கள் இருக்கின்றன என்றனர். அதனால் நானும் ஆர்வமாகப் படித்து தேர்வு எழுதி இருக்கிறேன்'' என்றார்.

Sponsored


தீபிகா என்ற மாணவி, ''கடந்த வாரம் சுட்டி விகடனால் வழங்கப்பட்ட சேலம் 150 இன்ஃபோ புக்கில் நான் சேலத்தில் பார்க்காதது, கேள்விப்படாத பல தகவல்கள் அதில் இருந்தது. அந்தப் புத்தகத்தை ஆர்வமாகப் படித்தேன். அந்தப் புத்தகத்திலிருந்து கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். நான் புத்தகத்தைப் படித்ததாலும் நான் சேலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் தேர்வு ரொம்ப சுலபமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. எங்க சேலத்தைப் பற்றி இவ்வளவு தகவல்களைக் கொடுத்த சுட்டி விகடனுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் ரொம்ப நன்றியை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்கிறேன்'' என்றார்.Trending Articles

Sponsored