தள்ளிப்போகும் தி.மு.க பொதுக்குழு!Sponsoredஅ.தி.மு.க ஸ்டைலில் தி.மு.க பொதுக்குழுவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நலக்குறைவால் திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

தி.மு.க தலைவர் மு.கருணாநிதிக்கு, வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நலம் விசாரிக்க அரசியல் தலைவர்கள் கோபாலபுரத்துக்குச் சென்றவண்ணம் உள்ளனர். இதனால், அரசியல் சூழல் பரபரப்பாகக் காணப்படுகிறது. கருணாநிதியின் உடல்நலம் முன்னேற்றம் அடைந்துவருவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Sponsored


 இந்தச் சூழ்நிலையில், தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டத்தை முதல் முறையாக அ.தி.மு.க. ஸ்டைலில் நடத்த கட்சித் தலைமை முடிவு செய்திருந்தது. அதாவது, அ.தி.மு.க-வின் பொதுக்குழு நடத்தப்படும் ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் சிறப்பாக தி.மு.க பொதுக்குழுவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதலில், ஆகஸ்ட் 28-ம் தேதி என்று தேதி முடிவுசெய்யப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காக அந்தத் தேதி மாற்றப்பட்டு, ஆகஸ்ட் 19-ம் தேதி என்று முடிவு எடுக்கப்பட்டது. பொதுக்குழுவில் அசைவ, சைவ விருந்துகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  தற்போது, கருணாநிதியின் உடல்நலக் குறைபாடு காரணமாக, பொதுக்குழுவின் தேதி மீண்டும் மாற்றப்படலாம் என்று கட்சியினர் தெரிவித்தனர். 

Sponsored
Trending Articles

Sponsored