`விஷமிகள் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம்!’ - கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலின் மீண்டும் விளக்கம் #karunanidhi``தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விஷமிகள் திட்டமிட்டுப் பரப்பும் வதந்திகளுக்கும் செவிமடுக்கவும் வேண்டாம்; அந்த வதந்திகளை நம்பவும் வேண்டாம்’’ என்று தி.மு.க-வினர் மற்றும் பொதுமக்களுக்கு அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Sponsored


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ``நம் அனைவரின் உயிருக்கும் உயிரான தலைவர் கலைஞரின் உடல்நிலை பற்றி, விஷமிகள் பரப்பும் வதந்தி எதையும் அவர்தம் அன்பு உடன்பிறப்புகளான தி.மு.க தொண்டர்களும் கட்சி சார்பற்ற முறையில் தலைவரின் உடல்நிலை பற்றி அக்கறையுடன் விசாரித்துவரும் அனைத்துத் தரப்பு மக்களும் நம்ப வேண்டாம்.

Sponsored


அவருக்கு அளிக்கப்பட்டுவரும் தொடர் சிகிச்சையின் விளைவாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் நன்கு கவனித்து சிகிச்சையளித்து வருகிறார்கள். மருத்துவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கட்சியினர் மற்றும் பொதுமக்களும் அவரைச் சந்திக்க வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored