கோபாலபுரத்தில் குவிந்த தலைவர்கள்! - கருணாநிதியின் உடல்நிலைகுறித்து விசாரிப்பு #KarunanidhiSponsoredதி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலைகுறித்து விசாரிப்பதற்காக, காங்கிரஸ் தலைவர்கள் நாராயணசாமி, குமரிஅனந்தன், குஷ்பு உள்ளிட்டோர் கோபாலபுரம் வந்தனர். 

தி.மு.க தலைவர் கருணாநிதியின் வயது முதிர்வு காரணமாக, கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக ஓய்வில் இருந்துவருகிறார். இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுவருகிறது என்று அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வரும் காவேரி மருத்துவமனை நேற்று அறிவித்தது. அதையடுத்து, பல்வேறு கட்சியின் தலைவர்கள், திரைக் கலைஞர்கள் கோபாலபுரம் சென்று மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலைகுறித்து விசாரித்துச் செல்கின்றனர்.

Sponsored


Sponsored


இந்த நிலையில், இன்று மதியத்துக்கு மேல் நடிகர்கள் விக்ரம், ஆனந்தராஜ், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, குமரி அனந்தன், குஷ்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இயக்குநர் பாக்யராஜ், `தி இந்து’ பத்திரிகை ஆசிரியர் என்.ராம் ஆகியோர் கோபாலபுரம் வந்து கருணாநிதியின் உடல்நிலைகுறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தனர். 

மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பின் பேசிய நாராயணசாமி, 'தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நிலை குணமடைய வேண்டும்' என்றார். 

குஷ்பு பேசும்போது, 'கருணாநிதி உடல் நலம் பெற்றுவருகிறார்' என்றார். 

பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, 'கருணாநிதியின் உடல்நிலையில் நேற்றைவிட இன்று முன்னேற்றம் இருப்பதாக மு.க.ஸ்டாலினும் கனிமொழியும் கூறினார்கள்' என்று தெரிவித்தார். 

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு பேசும்போது, 'கருணாநிதி நேற்றைவிட இன்று நல்ல உடல்நிலையில் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அவர், ஆரோக்கியமாக மீண்டு வந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன்' என்றார். 

Sponsored