`கேரள போலீஸ் காவலில் இறந்த தமிழக இளைஞர்’ -நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்!Sponsoredகேரள போலீஸார் கஸ்டடியில் இறந்த குமரிமாவட்ட இளைஞருக்கு நீதி கிடைக்க தமிழக அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் - கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளை ஆர்.சி தெருவைச்  சேர்ந்தவர் அனிஷ். இவருக்குப்  போதை பழக்கம் இருந்ததாகக்  கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 23-ம் தேதி கேரள மாநிலம் அமரவிளை மதுவிலக்கு போலீஸார்

விசாரணைக்காக அனிசை அழைத்துச்  சென்றுள்ளனர். அவரை நெய்யாற்றின்கரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி அனிஸ் இறந்துவிட்டதாக அவரது உறவினர்களுக்குக்  கேரள காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சிறைக்குச் செல்லும்போது அனிசுக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கைதிகளுக்கான அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனவும், திடீரென அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், கேரள போலீஸார் தாக்கியதில்  அனிஷ் இறந்திருப்பதாகவும். கேரள காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

Sponsored


மேலும் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் தமிழக எல்லைக்குள் வந்து அனிசை அழைத்துச் சென்றதாக களியக்காவிளை காவல்நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர். ஆனால் களியக்காவிளை காவல்நிலையத்தில் புகார் பெறப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் களியக்காவிளை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி புகாரை பெற்றுக்கொண்டனர். இருப்பினும் கேரள போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கும்வரை அனிசின் உடலைப் பெற்றுக்கொள்ளமாட்டோம் என உறவினர்கள் தெரிவித்தனர். அனிசின் உடல் திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கேரள மற்றும் தமிழக போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அனிசின் உடல் பிரேதபரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அனிசின் மரணத்துக்கு நீதி கிடைக்க தமிழக அரசியல் கட்சியினர் குரல் கொடுக்க வேண்டும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

Sponsored
Trending Articles

Sponsored