சிதம்பரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலை -போலீஸார் தீவிர விசாரணைSponsoredகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பாள் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து நகர போலீஸார் விசாரணை நடத்தினர்.

சிதம்பரம் நகர  இன்ஸ்பெக்டர் குமார், சப்- இன்ஸ்பெக்டர்கள்  நாகராஜன், பாலச்சந்தர் மற்றும் டிஎஸ்பி தனிப்படை  போலீஸார் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிதம்பரம் ரயில்வே பீட்டர் ரோட்டில் ஒரு  சாக்கு மூட்டைக்  கிடந்துள்ளது. அதை போலீஸார் கைப்பற்றி  மூட்டையை அவிழ்ந்து பார்த்த போது அதில் 56 செ.மீ உயரமும் சுமார் 26 கிலோ எடை கொண்ட அம்பாள் சிலை இருந்தது தெரியவந்தது. சிலையின் பீடத்தில் இருந்த எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளது.  நான்கு கைகள் கொண்ட அம்பாள் சிலையில் 2 கைகள் வெட்டப்பட்டுள்ளது. இது குறித்து  சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர்  பாலமுருகன் கொடுத்த புகாரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சிலை பழங்கால ஐம்பொன் சிலையாக இருக்கும் என்றும் இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர். விசாரணை  முடிந்த பிறகு  இந்தச் சிலை சிதம்பரம் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்படும் என்று சிதம்பரம் டிஎஸ்பி பாண்டியன் தெரிவித்தார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored