ரவுடி பினு பாணியில் கேக் வெட்டிய இளைஞர்! நண்பர்களால் சிறைக்குச் சென்ற துயரம்Sponsoredசென்னையில், ரவுடி பினு பாணியில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த சதீஷுக்கு  ஜூலை 21-ம் தேதி  பிறந்ததினம். இவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்ட நண்பர்கள் ஏற்பாடுசெய்தனர். சதீஷின் கையில் அரிவாள் கொடுத்து ரவுடி பினு பாணியில் கேக் வெட்டச் சொன்னார்கள். சதீஷ் அரிவாளால் கேக் வெட்டும் காட்சியை வீடியோவாகப் பதிவுசெய்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர். வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார், சதீஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன்  கேக் வெட்டப்பட்ட இடம், சுற்றுப்புறத்தை ஆராய்ந்து, அவரைக் கைதுசெய்தனர். 

Sponsored


பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதாக இந்திய கிரிமினல் தண்டனைச் சட்டம் 7(1) (A)-ன் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்குறித்து போலீஸ் உயர்அதிகாரி ஒருவர், ''வீடியோவைப் பார்க்கும்போது அவருக்கு அரிவாளை ஒழுங்காகப் பிடிக்கக்கூடத் தெரியவில்லை. பயந்து கை நடுக்கத்துடன் வெட்டுகிறார். அரிவாளால் கேக் வெட்டுவதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதைப் பார்த்து மற்ற இளைஞர்களும் கெட்டுப்போவார்கள்.  இதுபோன்ற விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில்தான் சதீஷ் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

Sponsored


ஆனால், இந்த விஷயத்தில் சதீஷின் நண்பர்கள்தான் அவரின் கையில் அரிவாள் கொடுத்து கேக் வெட்டச் சொன்னதாகக் கூறப்படுகிறது. நண்பர்கள் கொடுத்த ஐடியாவால், இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சதீஷ்.  Trending Articles

Sponsored