மருத்துவமனையில் தா.பாண்டியன் அனுமதி!



Sponsored



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தா.பாண்டியன்.  85 வயதாகும் இவர், கட்சிப்பணிகளில் தீவிரமாக இயங்கிவருகிறார். நேற்று கோபாலபுரம் சென்று தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம்குறித்து விசாரித்தார். இந்நிலையில்,  இன்று திடீரென்று அவருக்கு  மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன், ``தா.பாண்டியன் நலமுடன் உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துவருகின்றனர். ஏற்கெனவே, சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர், அதற்கான மருந்துகளை உட்கொண்டுவருகிறார். அதேபோல, டயாலிசிஸ் செய்தும்வருகிறார்.  இந்நிலையில், இன்று காலை திடிரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் வீடு திரும்புவார்'' என்று அவர் தெரிவித்தார்.

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored