சென்னையில் போலீஸ் எஸ்ஐ-க்கு கன்னத்தில் பளார் -  ஆட்டோ டிரைவர் கொடுத்த அதிர்ச்சி! Sponsored சென்னை திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே, குடிபோதையில் ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிய டிரைவரைப் பிடித்த போலீஸ் எஸ்.ஐ  தாக்கப்பட்டார். 

 சென்னை திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் மஜித், வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அடையாறிலிருந்து திருவான்மியூர் நோக்கி ஆட்டோ ஒன்று வந்தது. அந்த ஆட்டோவை டிரைவர் தாறுமாறாக ஓட்டினார். இதைக் கவனித்த சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் மஜித், ஆட்டோவை மடக்கிப் பிடித்தார். பிறகு, டிரைவரிடம் விசாரித்தார். 

Sponsored


 அப்போது டிரைவருக்கும் சப்-இன்ஸ்பெக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த டிரைவர், சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் மஜித்தின் கன்னத்தில் பளார் என்று அடித்தார். இதனால் நிலைக்குலைந்த அவர், ஆட்டோ டிரைவரை மடக்கிப்பிடித்தார். பிறகு, டிரைவரை திருவான்மியூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றார். அங்கு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 
 டிரைவரின் பெயர் பார்த்தசாரதி, பெரியார் நகர், திருவான்மியூர் என்று விசாரணையில் தெரிந்தது. சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பார்த்தசாரதியை போலீஸார் கைதுசெய்தனர். 

Sponsored


 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சமீபகாலமாக போலீஸாரைத் தாக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்துவருகிறது. திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே வாகனச்சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர அப்துல்மஜித்தை ஆட்டோ டிரைவர் பார்த்தசாரதி தாக்கியுள்ளார். அவர், குடிபோதையில் இருந்துள்ளார். இதனால், ஆட்டோவை சாலையில் தாறுமாறாக ஓட்டியுள்ளார். விசாரணைக்குப் பிறகு பார்த்தசாரதியைக் கைதுசெய்துள்ளோம்" என்றனர். 

 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை ஆட்டோ டிரைவர் தாக்கிய சம்பவம், காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Trending Articles

Sponsored