'பள்ளிகளை மூடும் அதிகாரம் பள்ளிகளுக்கு இல்லை' - மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்!Sponsored'தனிப்பட்ட முறையில் பள்ளிகளை நடத்த முடியவில்லை என்றால், மூடும் அதிகாரம் பள்ளிகளுக்கு இல்லை' என சிபிஎஸ்இ உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


மெட்ரிக் பள்ளிகளில் தனியார் நிறுவனங்கள் மூலம் நீட் பயிற்சி அளிப்பது வணிகமயமாக்கக்கூடிய சூழலை உருவாக்கும். இப்படியான பயிற்சியில் மாணவர்களைச் சேர கட்டாயப்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால், பள்ளியின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும். பள்ளிகளுக்கு உள்ளே நீட் தேர்வுப் பயிற்சி மையங்களை அனுமதிக்கக் கூடாது என்ற அதிரடி அறிவிப்பை சமீபத்தில் மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்டது. இதையடுத்து, தற்போது சிபிஎஸ்இ, தனியார் பள்ளிகளுக்கு, மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தனிப்பட்ட முறையில் பள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால், மூடும் அதிகாரம் பள்ளிகளுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், மூடப்படும் பள்ளிகளை நடத்த சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை சொந்த ஆதாயத்துக்கு பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored