கொடுத்தது 1600 மீட்டர்... போட்டது 1 கிலோ மீட்டர்... புதிய தார் சாலையால் அதிர்ந்த பொதுமக்கள்Sponsoredநெய்வேலி அருகே உள்ளது இருப்பு கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசியம்மன் கோயிலில் இருந்து தெற்கிருப்பு கிராமம் வரை செல்லும் 1600 மீட்டர் சாலை மிகவும் சீர்கேடு அடைந்து, குண்டும் குழியுமாக நீண்ட நாள்களாக போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

இந்த நிலையில், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இந்தச் சாலையை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் சீரமைக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, சாலை அமைக்கும் பணி நடந்துவந்தது. இந்தப் பணிகளை எடுத்த ஒப்பந்ததாரர், பழைய மண் சாலையை சுத்தம் செய்யாமல், மேடு பள்ளங்களில் ஜல்லிகளை நிரப்பாமலும், தரமில்லாத தார் சாலையின் உயரத்தைக் குறைத்தும் தரமற்ற முறையில் சாலைப் பணிகளைச் செய்துள்ளார்.

Sponsored


இதைப் பார்த்த இப்பகுதி இளைஞர்கள் சிலர், தரமற்ற சாலைப் பணியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கைகளால் சாலையை
பெயர்த்தபோது, தார் சாலை அப்படியே பெயர்ந்து வந்துள்ளது. பெயர்ந்த சாலைக்கு பூ தூவி, `நீ பல வருடம்  வாழ்வாய் என நினைத்தேனே. ஆனால் போட்ட அன்றே  இறந்துவிட்டாயே' எனக் கூறி ஒப்பாரி வைத்து அழுது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ, சமூக வளைதளங்களில் வேகமாக வைரலாகப் பரவிவருகிறது. இதுகுறித்து சாலைப் பணியை எடுத்த ஒப்பந்ததாரரிடம் கேட்டுள்ளனர். இதனால், இளைஞர்களுக்கும் ஒப்பந்ததாரருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஒப்பந்ததாரரிடம் சூப்பர்வைசராகப் பணிபுரியும் இளையராஜா என்பவர், ஊமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், தெற்கிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 7 இளைஞர்கள்மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Sponsored


இதுகுறித்து கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியப் பொறியாளரிடம் விசாரித்ததில், சாலைப் பணி எடுத்த ஒப்பந்ததாரர் ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் இல்லாதபோது, இந்தப் பணியைச் செய்துள்ளார். சாலை அமைப்பதற்கு முன்பு சாலையை சுத்தம்செய்யாமல் பணிகளைச் செய்துள்ளார். மேலும், பணியும் தரமில்லாமல் இருந்துள்ளது. மொத்தம் 1600 மீட்டரில் 1 கிலோ மீட்டர் மட்டும் சாலைப் பணி நடந்துள்ளது. தற்போது பணி  நிறுத்தப்பட்டுள்ளதோடு, ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சாலையைத் தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். 
  Trending Articles

Sponsored