கருணாநிதி படித்த பள்ளியில் மாணவர்கள் கூட்டுப் பிரார்த்தனை!Sponsoredதி.மு.க தலைவர் கருணாநிதி படித்த திருவாரூர் வடபாதிமங்களம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், அவர் விரைவில் நலம்பெற வேண்டி கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர்.

திருவாரூரில் உள்ள வடபாதிமங்களம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்தான் 1939ம் ஆண்டு கருணாநிதி படித்துள்ளார். தற்போது, தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதையொட்டி, அவரது சொந்த ஊரான திருவாரூர் மக்கள் அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்த்துக் கொண்டிருகின்றனர். அதுமட்டுமில்லாமல், அவரது பிறந்த ஊரான திருக்குவளையிலும் மக்கள் மிகுந்த கவலையோடும் கருணாநிதி திரும்பவும் எங்கள் ஊருக்கு வரவேண்டும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தங்களுடைய பிராத்தனைகளை கடவுள் முன் வைக்கின்றனர். இந்தநிலையில் திருவாரூரில் தி.மு.க தலைவர் கருணாநிதி படித்த பள்ளியான வடபாதிமங்களம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Sponsored


Sponsored


இந்தப் பள்ளியில்தான் தி.மு.க தலைவர் கருணாநிதி, 1939ம் ஆண்டு  எட்டாம் வகுப்பு  பயின்றுள்ளார். அவர் இந்த பள்ளியில் பயின்ற காலத்தில் முதலில் மாணவர் கையெழுத்து பிரதி ஒன்றை அறிமுகப்படுத்தி, அதில் மாணவர்களின் படைப்புகளை சேகரித்து அவை மாணவர்களுக்கு பயன்படும் விதமாக செய்துள்ளார். பின்னர், இந்த பள்ளியில்  மாணவர் மன்றம் என்ற அமைப்பு ஒன்றினை உருவாக்கி  அந்த மன்றத்தில் தமிழ் அறிஞர்களையும், நாவலர் நெடுஞ்செழியனையும் இந்த பள்ளியின் மாணவர் மன்றத்திலே பேச வைத்திருக்கிறார். இந்தப் பள்ளியில் படித்தபோதுதான் மாணவ நேசன் பத்திரிக்கையை நடத்தி வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல், இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் தமிழ் கொடியேந்தி மாணவராக கலந்து கொண்டுள்ளார். இவ்வாறு, கருணாநிதியின் அரசியல் பயணமானது அவர் படித்த பள்ளியிலிருந்தே துவங்கியுள்ளார். தற்போது, அவரது உடல்நிலை சரியில்லாததைத் தொடர்ந்து மாணவர்கள் மற்று ஆசிரியர்கள் மத்தியில் கவலையை உண்டாக்கியுள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றாக இணைந்து கூட்டுப் பிராத்தனையில் ஈடுபட்டனர்.Trending Articles

Sponsored