தா.பாண்டியன் உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவர்கள் தகவல்Sponsoredஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல்நிலையில்  முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன். தற்போது அவருக்கு 85 வயதாகிறது. இருந்தாலும் பம்பரம் போல் சுழன்று கட்சிப் பணியாற்றி வருபவர். சிறுநீரக் கோளாறு இருப்பதன்  காரணமாக அவ்வப்போது டயாலிசிஸ் செய்து வருகிறார். இந்தநிலையில், இன்று திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைகள் முடிந்து, அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Sponsored


அவரின் உடல்நிலை குறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு  மருத்துவமனை டீன் ஜெயந்தியிடம் பேசினோம்.`` நாள்பட்ட சிறுநீரகக் கோளாறின் (Chronic kidney disease) காரணமாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. இன்று ஒருமுறை டயசிலிஸ் செய்திருக்கிறோம். தற்போது அவர் உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கிறது. இதனால், அவரை சாதாரண வார்டுக்கு மாற்றி சிகிச்சையளித்து வருகிறோம். விரைவில் முழுமையாகக் குணமடைந்துவிடுவார் `` என்று அவர் தெரிவித்தார்.

Sponsored
Trending Articles

Sponsored