கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது! - காவேரி மருத்துவமனை அறிக்கைSponsoredதி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல்நலிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, பல்வேறு கட்சியினரும் தி.மு.க தலைவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க கோபாலபுரம் நோக்கி படையெடுத்தனர். கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய நேற்றிரவு கோபாலபுரத்தைச் சுற்றி அதிக அளவில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். இதற்கிடையே, தனது வீட்டுக்கு புறப்பட்டுச்சென்ற தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின், இரவு 12 மணி அளவில் கோபாலபுரத்துக்கு மீண்டும் வந்தார். அவரைத் தொடர்ந்து துர்கா ஸ்டாலின், துரைமுருகன், அழகி, கனிமொழி, செல்வி உள்ளிட்ட பலர் அங்கு வந்தடைந்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Sponsored


கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் திடீரெனக் குறைந்ததால், நள்ளிரவு ஒரு மணிவாக்கில் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டபின், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ரத்த அழுத்தம் சீராக உள்ளது என கூறி அறிக்கை வெளியிடப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அரசியல் கட்சித்தலைவர்களும், திரையுலகினரும் ஸ்டாலினை நேரில் சந்தித்து விசாரித்து வருகின்றனர். அதேபோல, அண்டை மாநில முதலமைச்சர்களும் நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது காவிரி மருத்துவமனை சார்பில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் `கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதிக்கு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு சிகிச்சை அளித்து வருகிறது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored