அறுந்து தொங்கிய மின்சார வயர்கள் -களத்தில் இறங்கிச் சரிசெய்த மாவட்ட ஆட்சியர்!Sponsored 

அரசு பணியாக சென்ற கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கண்களில் ஒரு வீட்டில் அறுந்து தொங்கிய மின்சார வயர்கள் பட, களத்தில் இறங்கி அதைச் சரிசெய்துவிட்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று அசத்தி இருக்கிறார்.

கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் திடீரென ஒரு வீட்டில் இருந்த மின்சார வயர்கள் அறுந்து நடுரோட்டில் தொங்கியது. அப்போது அந்த வழியே பயணம் செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் கண்களில் அந்த அறுந்து தொங்கிய வயர்கள் பட, காரை நிறுத்தச் சொல்லி இருக்கிறார். உடனடியாக தனது வாகனத்தை விட்டு கீழே இறங்கிய அவர், அந்தச் சாலையில் யாரும் பயணம் செய்யாத வகையில் ஏற்பாடுகளைச் செய்து மின்சாரத்துறை  அலுவலர்களுக்கு அவரே செல்போனில் தொடர்பு கொண்டு உடனடியாக இந்தப் பகுதியில் மின்சாரத்தைத் தடை செய்ய வேண்டும் என்று அவசரமாக உத்தரவு பிறப்பித்தார். அதோடு, அவர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு வருமாறும் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மின்சார வாரிய பணியாளர்களும் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அந்தச் பகுதியில் போக்குவரத்துக் காவலர்கள் மூலம்  போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

Sponsored


அதன்பின்னர் அறுந்து கிடந்த மின்சார வயரை சரி செய்யும் பணிகளை மின்வாரிய ஊழியர்கள் தொடங்கினர் . அறுந்து கிடந்த மின்சார வயர்களை சரி செய்யும் பணிகள்  தொடங்கிய பிறகே மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு சென்றார். இதுபற்றி பேசிய அந்தச் பகுதி மக்கள்,  "அந்த வீட்டில் மின்சார வயர்கள் அறுந்து தொங்ய  விஷயம் வீட்டுகாரங்களக்கே தெரியவில்லை. ஆனால், அந்தவழியா போன கலெக்டர் அந்த வயர்களை பார்த்து, தானே களத்தில் இறங்கி அதைச் சரிசெய்யவைத்தபிறகே போனார். மின்சாரம் தாக்கி உயிரே போனாலும் வராத அதிகாரிகளும் இருக்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட ஆச்சர்ய மாவட்ட ஆட்சியரும் இருக்கிறார்" என்று மெச்சினார்கள்.

Sponsored
Trending Articles

Sponsored