``திருப்புல்லாணிக்கு விஞ்ஞானிகளை அனுப்பி உண்மையைத் தெரியப்படுத்த வேண்டும்” -எஸ்.டி.பி.ஐ கட்சிSponsoredமதுரைக்கு வருகை தந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின்  மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் செய்தியாளர்களிடம் பேசும்போது,  "ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியைச் சுற்றியுள்ள பகுதிகளில்  ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கும், ஒரு மீட்டர் ஆழத்தில் நிலத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அந்தப் பகுதிக்கு ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் இதனால் பயப்பட வேண்டிய  அவசியம் இல்லை என்று மக்களிடத்தில் சொல்லிச் சென்றுள்ளார்கள். சில வருடங்களாக அப்பகுதியில்  ஓ.என்.ஜி.சி. யின் எரிவாயு கிணறுகள்  செயல்பட்டு வருகிறது. இந்தக் கிணறுகளை தோண்டும் போது அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ஆனாலும்,  ஓ.என்.ஜி.சி மக்களுடைய எதிர்ப்புகளை மீறிச் செயல்பட்டு வருகிறது. எண்ணெய் கிணறுகள் தோண்டப்பட்டு வருவதால்தான் இதுபோன்ற நில வெடிப்பு ஏற்பட்டுள்ளது என்றும்  இது  மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் என அப்பகுதி மக்கள் அச்சம் கொண்டுள்ளார்கள். எனவே இதை சாதாரண நிகழ்வாக மத்திய மாநில அரசுகள் எடுத்துக் கொள்ளாமல், மிகப்பெரிய விபத்தைத் தடுக்கும் பொருட்டு உடனடியாக அப்பகுதிக்கு விஞ்ஞானிகளை அனுப்பி உண்மை நிலையை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அங்குள்ள மக்களின் அச்சத்தைப் போக்க  தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு  அவர்களுக்குத் தேவையான  இழப்பீட்டினை வழங்கி அச்சத்தைப் போக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட், நியூட்ரினாவை மீண்டும் கொண்டு வரக்கூடாது என மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored