தமிழகக் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் தஞ்சை அருகே விபத்தில் உயிரிழப்பு!Sponsoredதமிழகக் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் குலோத்துங்கன், தஞ்சை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில்  உயிரிழந்துள்ளார்.

தஞ்சாவூர் அருளானந்த நகரைச் சேர்ந்தவர் குலோத்துங்கன். இவர் தமிழ்நாடு சந்தோஷ் டிராபி கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனாக இருந்துள்ளார். நேற்று அதிகாலை 3 மணிக்கு டூ விலரில் தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது, வல்லம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ரோட்டில் உள்ள தடுப்பில் மோதி தலை மற்றும் மார்பு ஆகிய பகுதிகளில் காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வல்லம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sponsored


இவர், கடந்த 2003-ம் ஆண்டிற்கான ஆசியா கால்பந்து போட்டியில் மேற்கு வங்காள அணி சார்பில் விளையாடி வெற்றி பெற்றுள்ளார். 2012-ம் ஆண்டு பவானிபூரிலில் நடந்த கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார். அத்துடன் சந்தோஷ் டிராபி தொடரில் பங்கேற்ற தமிழக அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored