மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தா.பாண்டியனிடம் நேரில் நலம் விசாரித்த ஸ்டாலின்!Sponsoredமூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை நேரில் சந்தித்து தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன், தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 85 வயதான அவர்,  கட்சி சார்பாக மட்டுமின்றி மற்ற அமைப்புகள் நடத்தும் போராட்டங்களிலும் அவ்வப்போது பங்கேற்று வருகிறார். நேற்று முன்தினம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன்காரணமாக அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சுத்திணறலுடன் அவருக்கு சிறுநீரகப் பிரச்னையும் இருப்பதால் டயாலிஸிஸ் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரை, தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் அவரது உடல்நிலை குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored