`வதந்திகளுக்கு நாம் தமிழர் கட்சி காரணமல்ல!’ - சீமான் விளக்கம்Sponsoredகருணாநிதியின் உடல்நிலை குறித்து நாம் தமிழர் கட்சியினர்தான் வதந்தி பரப்புவதாகக் கூறப்பட்டப் புகாருக்கு, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்களித்திருக்கிறார். 

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வயது முதிர்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள உடல்நிலை பாதிப்பால், சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 3 நாள்களாக அரசியல் தலைவர்கள் பலர், கருணாநிதியின் இல்லம் மற்றும் மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். நான்காவது நாளான இன்றும் தொடர்ந்து பல தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், பா.ஜ.க எம்.பி இல. கணேசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்துச் சென்றனர். 

Sponsored


கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்த பின்னர் மருத்துவமனை வளாகத்தில் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், `கருணாநிதியின் உடல்நிலை குறித்து நாம் தமிழர் கட்சியினர்தான் அதிகம் வதந்தி பரப்புவதாக புகார் கூறப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சீமான், “ வதந்திகள் பரப்புவதைப் பலர் செய்கின்றனர். ஆனால் மொத்தமாக நாம் தமிழர் கட்சிதான் செய்கிறது எனக் கூறக்கூடாது. சமூக வலைதளங்களில் பலர், நாம் தமிழர் கட்சியின் பெயரில் பதிவிடுகின்றனர். அதைத் தேடி பார்க்கும் போது அவர்கள் எங்கள் கட்சியே கிடையாது எனத் தெரிந்தது. வதந்தி பரப்புவது அரசியல் நாகரீகத்தைத் தாண்டி மிக மோசமான செயல்.பல அரசியல் கட்சி தலைவர்கள் என்னை விமர்சிக்கச் சம்பளத்துக்கு ஆள் வைத்துள்ளனர். ஆனால், கருத்து வெறுப்பு வேறு, மனித வெறுப்பு வேறு. அரசியல் மாறுபாடுகள் இருக்கலாம், அதையும் தாண்டிய மனித பண்புகள் என்பதுதான் புனிதமானது. அதைக் காப்பாற்ற வேண்டும். அடுத்தவர்களைக் காயப்படுத்தி மகிழ்ச்சி அடைகிற மனநிலை மிகவும் ஆபத்தானது. கருணாநிதி மட்டுமல்லாமல், அனைத்துத் தலைவர்களையும் விமர்சிப்பது தேவையற்ற செயல். அனைவரும் சரியாக இருப்பார்கள் எனக் கூறமுடியாது. சமூக வலைதளம் என்பது பெரிய கடல், இதில் ஒரு துளி விஷம் கலந்தால், அதற்கு மொத்தக் கடலும் பொறுப்பேற்க முடியாது” எனக் கூறியுள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored