டி.டி.வி தினகரன் வீடு அருகே காரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற முன்னாள் அ.ம.மு.க நிர்வாகி! - பின்னணித் தகவல்கள்Sponsoredடி.டி.வி. தினகரன் வீடு அருகே பெட்ரோல் ஊற்றித் தனது காரை எரிக்க முயன்றதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக முன்னாள் நிர்வாகி புல்லட் பரிமளம் மற்றும் அவரது கார் ஓட்டுநர் சுப்பையா ஆகியோர் மீது புகார் எழுந்துள்ளது. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன். இவரது கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட நகர செயலாளராக இருந்தவர் புல்லட் பரிமளம். கட்சியின் விதிமுறைகளை மீறியதாகக் கூறி கடந்த 20 நாள்களுக்கு முன்பு, புல்லட் பரிமளம் மற்றும் அவரது மனைவியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார் டி.டி.வி.தினகரன். இந்நிலையில், இன்று பெசன்ட் நகரில் உள்ள டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு வந்த புல்லட் பரிமளம், முன்கூட்டியே வைக்கோல்களை, தனது காரில் பதுக்கி வைத்துள்ளார். இதையடுத்து, கையில் 5 லிட்டர் கேனில் பெட்ரோலை எடுத்து வந்த அவர், காரில் பெட்ரோலை ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளார். 

Sponsored


Sponsored


அப்போது டி.டி.வி.தினகரனின் புகைப்படக் கலைஞர் டார்வின் மற்றும் ஓட்டுநர் பாண்டியன் ஆகியோர்  புல்லட் பரிமளத்தைத் தடுக்க முயற்சித்துள்ளனர். உடனே, சுதாரித்துக்கொண்ட அவர், பெட்ரோல் கேனை கொளுத்திவிட்டுள்ளார். இதனால், டார்வின் மற்றும் பாண்டியன் ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடலில் 25 சதவிகிதத்துக்கும் அதிமான தீக் காயங்களோடு அவர்கள் இருவரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து புல்லட் பரிமளம் மாயமான நிலையில், அவரது கார் ஓட்டுநரான சுப்பையா என்பவரைப் போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் புல்லட் பரிமளத்துக்கும் கடுமையாகக் காயம் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். 

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லட் பரிமளம் என்பவர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு அ.ம.மு.கவை விட்டு தினகரன் நீக்கியுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் டி.டி.வி தினகரன் இல்லம் முன்பு கோஷம் எழுப்பிய புல்லட் பரிமளம், தனது ஓட்டுனர் சுப்பையா என்பவருடன் சேர்ந்த தனது காரை பெட்ரோல் ஊற்றி எரித்து, கற்களை கொண்டு தாக்கியுள்ளார். இதனால் பரிமளத்திற்கு சிறிய அளவில் தீக்காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓட்டுநர் சுப்பையாவைப் பிடித்து விசாரணை செய்து வருகிறோம்’’ என்று அடையாறு துணை ஆணையர்  செஷாங் சாய் கூறியிருக்கிறார்.Trending Articles

Sponsored