யார் இந்த புல்லட் பரிமளம்? - பின்னணி தகவல்கள்!Sponsoredஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் கட்சிப்பொறுப்பிலிருந்து நீக்கியதாக கூறி, டி.டி.வி.தினகரன் வீட்டு முன் தனது காரை தானே எரிக்க முயற்சி செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் புல்லட் பரிமளம். 


சர்ச்சைக்கு பெயர் போனவர் `பேனர் புல்லட் பரிமளம்'. காஞ்சிபுரம் நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர். இவர் வைக்கும் பேனர்கள் தமிழக அளவில் பேசப்படும். ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது,  `அம்மாவுக்காக பஸ்ஸை எரித்து சிறைச்சென்ற உண்மைத்தொண்டன்' என்று காஞ்சிபுரத்தில் இவர் வைத்த பேனரால் ஆடிப்போனார்கள் அதிமுகவினர். இதையடுத்து பேனர் விவகாரம் மேலிடத்துக்கு சென்றதால், பேனரை அகற்ற உத்தரவு வந்தது. இதனால் பேனரை அகற்றினார் பரிமளம். பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மீதான தீர்ப்பு நெருங்கும் சமயத்தில், `‘அம்மா வழக்கிலிருந்து விடுதலை. அம்மாவை நிரபராதி என்று நீதியரசர் தீர்ப்பு வழங்கியுள்ளார்’ என்ற வாசங்களை அடங்கிய பேனரை முன்கூட்டியே வைத்தவர்.

Sponsored


Sponsored


மேலும் இவர் குறித்து கட்சியினரிடையே விசாரித்தோம். அப்போது `கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க 222 இடங்களில் வென்றுவிட்டதாக தேர்தல் முடிவுகள் வருவதற்கு ஒரு நாள் முன்பாகவே பேனர் வைத்தார். இதனால், ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளான அவர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதேபோல், காஞ்சிபுரத்தில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவத் தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறித் தனது இடது கை விரல் ஒன்றைக் கடந்த 2011ம் ஆண்டு துண்டித்துப் பரபரப்பைக் கிளப்பியவர் இந்த பரிமளம்’’ என்கிறார்கள்.குறிப்பாக புல்லட் பரிமளம் பெட்ரோல் கேனுடன் வந்ததற்கான காரணம் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளிடம் கேட்ட போது, `தினகரன் உதவியாளர்கள் சிலர், புல்லட் பரிமளத்திடம்,  உங்களை பற்றி நல்லவிதமாக  டி.டி.வி.தினகரனிடம் கூறுகிறோம் என்று பேசி குறிப்பிட்ட தொகையை வாங்கியுள்ளனர். பலநாட்களாக பணத்தை வாங்கி கொண்டிருந்த உதவியாளர்கள், 2நாட்களுக்கு முன்பு பெரிய தொகை ஒன்றை கேட்டுள்ளனர். அதை கொடுக்க முடியாது என புல்லட் பரிமளம் கூறியதும், ஆத்திரமடைந்த உதவியாளர்கள் டி.டி.வி.தினகரனிடம் புல்லட் பரிமளத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். இதன் காரணமாகத்தான் புல்லட் பரிமளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்  பெட்ரோல் கேனுடன் டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு வந்து, தான் கொடுத்த  பணத்தை திரும்பக்கேட்டு தன்னுடைய காரை தானே எரிக்க முயன்றார்' என்றனர்.
 Trending Articles

Sponsored