அப்போலோ மருத்துவமனையில் விசாரணை ஆணையம் சார்பில் ஆய்வு!Sponsoredமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் வழக்கறிஞர்கள் ஆய்வு நடத்தினர்.


மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எழுந்த சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையம் அரசிடம் அறிக்கை அளிக்க தாமதமானதால், இரண்டுமுறை காலநீட்டிப்பும் வழங்கப்பட்டது. இதனிடையே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரை காண வந்தவர்கள், வீட்டு வேலையாட்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்போல்லோ மருத்துவமனையில் விசாரணை நடத்த ஆணையம் திட்டமிட்டது. அதன்படி கடந்த 15ம் தேதி ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு அப்போலோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

Sponsored


இதையடுத்து  29-ம் தேதியான இன்று  ஆறுமுகசாமி ஆணையம் சார்பில், வழக்கறிஞர்கள் நிரஞ்சன் ராஜகோபாலன், பார்த்த சாரதி, ஆகிய இருவரும் அப்போலோ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக ஏற்கெனவே விசாரணை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாலை 7மணி அளவில் அப்போலோ மருத்துவமனைக்கு வந்த வழக்கறிஞர்கள், விசாரணை ஆணையச் செயலாளர் கோமலா முன்னிலையில் ஆய்வு நடத்தினர். அவர்கள் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட எமெர்ஜென்சி வார்டு, ஐசியூ வார்டு, மருத்துவமனையில் அமைச்சர்கள் இருந்த அறை, சசிகலா தங்கியிருந்த அறை, எம்பாமிங் செய்யப்பட்ட அறை, ஜெயலலிதாவுக்கு உணவு தயாரிக்கப்பட்ட அறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். 

Sponsored
Trending Articles

Sponsored