பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமனம்: அறநிலையத்துறை தகவல்Sponsoredதமிழக அறநிலையத்துறை கோயிலில் பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அறநிலையத்துறை நிர்வகிக்கும் மதுரை கோயிலில் பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2005- ம் ஆண்டு முதல்வராக கருணாநிதி இருந்த காலகட்டத்தில்தான் தமிழகத்தில் பிராமணர் அல்லாத பிற சாதியினருக்கும் அர்ச்சகர் பணி வழங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2007-08-ம் ஆண்டு அனைத்து சாதியில் இருந்தும் 206 பேர் அர்ச்சகர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அதில், ஒருவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலில் பிராமணர் அல்லாத ஒருவருக்கு அர்ச்சகர் பணி வழங்கப்படுவது இதுவே முதன்முறை. 

Sponsored


இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், `` ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு ஆகமவிதி உள்ளது. அந்தக் கோயில்களின் ஆகமவிதிகளுக்குட்பட்டே அர்ச்சகர் நியமனம் நடைபெறும். கோயில் செயல் அதிகாரி நேர்காணல் கண்டு ஆகம விதிகளுக்குட்பட்டு அர்ச்சகர்களைத் தேர்வு செய்வார்கள். எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களும் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், ஆகமவிதிகளுக்குட்பட்டுதான் தேர்வு நடைபெறும் '' என்றார்.

Sponsored


தமிழ்நாடு பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன், ``ஒரு கோயிலில் பிராமணர் அல்லாதோர் அர்ச்சகராகப் பணிக்கு நியமிக்கப்பட்டால் மட்டும் போதாது. தமிழகத்தின் முக்கியமான பெரிய கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும். அப்போதுதான் கோயில்களில் அர்ச்சகர் நியமனத்தில் நிலவும் சாதிய பாகுபாடு தீரும்'' என்கிறார்.

கடந்த 2006-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகப் பணியாற்றலாம் என்று சட்டம் இயற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. 2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், அதேவேளையில் கோயிலின் ஆகமவிதிகளைப் பின்பற்றி அர்ச்சகர் நியமனம் இருக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டிருந்தது. தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று கருணாநிதி கனவு கண்டார். அந்த லட்சியத்திட்டம் நிறைவேறியுள்ளது.Trending Articles

Sponsored