`தலைவருக்கு ஒன்னும் ஆகக்கூடாது..!’ - மருத்துவமனை வாசலில் மொட்டை அடித்த தொண்டர்கள்Sponsoredதி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நிலை முன்னேற்றம் அடைய வேண்டி காவேரி மருத்துவமனை அருகே தி.மு.க தொண்டர்கள் மொட்டை அடித்துக்கொள்ளும் காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


 

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை, வயது முதுமை காரணமாக நலிவடைந்திருக்கிறது. காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் இன்று காலை நேரில் சென்று பார்த்தனர். ‘அவர் நலமாக இருக்கிறார்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Sponsored 

Sponsored


கருணாநிதியின் உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளால் தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம், காவேரி மருத்துவமனை எனத் தொண்டர்கள் குவிந்துள்ளனர். முக்கியமாக வயதான பெண்கள் பலர் மருத்துவமனை வளாகத்தில் கண்ணீருடன் அமர்ந்துள்ளனர்.  


 

நேற்றிரவு கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதாகச் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகளவிலான தொண்டர்கள் காவேரி மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். பின்னர் காவேரி மருத்துவமனை, ‘கலைஞர்  நலமாக உள்ளார்’ என்று அறிக்கை வெளியிட்ட பிறகுதான் தொண்டர்கள் நிம்மதியடைந்தனர்.


 

`கருணாநிதி  உடல்நலம் முற்றிலும் குணமடைய வேண்டும். அவர் முழுவதுமாக நலமடைந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறும்வரை நாங்கள் இந்த இடம்விட்டு நகரமாட்டோம்’ என்று தொண்டர்கள்  காவேரி மருத்துவமனை வளாகத்தில் நின்றுகொண்டிருக்கின்றனர். நேற்றிரவு பெய்த மழையையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. வெயிலையும் கண்டுகொள்ளவில்லை. சிலர் அங்கேயே மொட்டை அடித்து  `கருணாநிதி உடல்நலம் தேறி வீடு திரும்ப வேண்டும்’ என்று கடவுளுக்கு வேண்டுதல் செய்தனர். இதுபோன்று பல உருக்கமான காட்சிகளை காவேரி மருத்துவமனை வாசலில் காண முடிகிறது!Trending Articles

Sponsored