'உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை!'- சர்ச்சையில் ரஜினி மக்கள் மன்றம் Sponsoredமுப்பது ஆண்டுகளாக ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்டச் செயலாளராக இருந்த காரைக்கால் மௌலாவை நீக்கியுள்ளது, மாநிலத் தலைமை. 'ரசிகர் மன்றத்தில் கடுமையாக உழைத்தவர்களுக்கு எந்த மரியாதையும் வழங்கப்படுவதில்லை' எனவும் அவர்கள் வேதனைப்படுகின்றனர். 

'புதிய அரசியல் கட்சி எப்போது தொடங்கப்படும்?' என்ற கேள்விக்கு, நடிகர் ரஜினிகாந்த் இன்னமும் பதில் சொல்லவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளில் அவர் தீவிர ஆர்வம் காட்டிவருகிறார். மன்றத்தின் செயல்பாடுகளுக்கு விரோதமாகச் செயல்படுகிறவர்களை, நீக்கும் பணிகளும் நடந்துவருகின்றன.  

Sponsored


எச்.மௌலாவிடம் பேசினோம். " ரஜினி மக்கள் மன்றம் உதயமானதும், கடந்த 30.6.2018 அன்று மாவட்ட பொறுப்பாளராக என்னை நியமித்தது தலைமை. இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி சென்னைக்கு வரும்படி போனில் அழைப்பு வந்தது. அன்றைய தினம் வெளிநாட்டில் வசிக்கும் என்னுடைய உறவினர் ஒருவருக்குத் திருமணம். அந்தத் திருமணப் பதிவுக்கு என்னை சாட்சியாகப் போட்டிருந்தனர். எனவே, அந்தத் திருமணத்தில் நான் கலந்துகொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்குத் தலைமையும் சம்மதம் தெரிவித்துவிட்டது. ஆனால், 26.7.2018-ல் அன்று வெளியிடப்பட்ட நிர்வாகிகள் அறிவிப்பில் என்னுடைய பெயர் இல்லை. இதுகுறித்து அமைப்புச் செயலாளர் டாக்டர். இளவரசனிடம் கேட்டதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. அவரை சந்திக்க அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, தலைமையில் உள்ள மற்ற நிர்வாகிகளிடமும் பேசினேன். அவர்களும் எந்த பதிலும் சொல்லவில்லை. இதுதொடர்பாக, வரும் 3-ம் தேதி ரஜினியை சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.  

Sponsored


இந்த விவகாரம் தொடர்பாகப் பேசும் மன்ற நிர்வாகிகள் சிலர், `` திருவாரூர், கடலூர், விருத்தாசலம், தேனி  ஆகிய மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர். ரசிகர் மன்றத்தில் கடுமையாக உழைத்தவர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. ரசிகர்களாக இருந்து நிர்வாகிகளாக நீண்டகாலமாகப் பணியாற்றிய எங்களைப் புரிந்துகொண்ட நிர்வாகிகளும் தலைமையில் இல்லை. வருங்காலங்களில் மாவட்டச் செயலாளருக்குத்தான் அனைத்து அதிகாரமும் கொடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது" என்கின்றனர். 

மௌலா நீக்கம் குறித்து அமைப்புச் செயலாளர் டாக்டர் இளவரசனிடம் கேட்டதற்கு, ``தலைவரின் (ரஜினி) உத்தரவுப்படிதான் செயல்படுகிறோம்.  நாங்கள் செயல்வீரர்கள் மட்டுமல்ல" என்றார் சுருக்கமாக.Trending Articles

Sponsored