`என்னுடைய அரசியல் குரு கருணாநிதி' - சரத்குமார் நெகிழ்ச்சிSponsored``என்னுடைய அரசியல் குரு கருணாநிதி'' என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலம் குறைவால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நலம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்த வண்ணம் உள்ளனர். சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், துணைப் பொதுச் செயலாளர் சேவியர், தலைமை நிலையச் செயலாளர் பாக்கியரதி ஆகியோர் இன்று காவேரி மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு கருணாநிதியின் உடல் நலம் குறித்து அவரின் குடும்பத்தினரிடமும் தி.மு.க-வின் மூத்த தலைவர்களிடமும் விசாரித்தனர். 

Sponsored


பிறகு சரத்குமார் செய்தியாளர்களிடம், ``என்னுடைய அரசியல் குரு கருணாநிதி. அவர் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும். கருணாநிதி நலமாக இருக்கிறார்" என்றார். 

Sponsored


மு.க.ஸ்டாலின், அழகிரி, ராசாத்தி, கனிமொழி மற்றும் தி.மு.க மூத்த தலைவர்களைச் சரத்குமார் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் பேசியுள்ளார். அதுகுறித்து ச.ம.க-வினர் கூறுகையில், "தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தை மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தபோது, நேற்றிரவு தலைவரின் உடல் நலம் பின்னடைவைச் சந்தித்தது. மருத்துவ குழுவினரால் தற்போது அவரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தலைவர் நலமாக இருக்கிறார். டாக்டர்கள் போராடிவருகின்றனர். அதற்கு மேல் இயற்கை என்று கூறியிருக்கிறார். மு.க.அழகிரியும் சரத்குமாரும் கட்டியணைத்துள்ளனர். அப்போது அழகிரியும் கருணாநிதி நலமாக இருப்பதாகத் தெரிவித்ததோடு, சிகிச்சை குறித்தும் கூறியுள்ளார்.

கருணாநிதியின் துணைவியார், ராசாத்தியம்மாள், கவலைதோய்ந்த முகத்தோடு காணப்பட்டார். அவரை அறியாமல் அவரின் கண்கள் குளமாகியிருந்தன. அவரால் எதுவும் பேச முடியாமல் பதற்றத்துடன் காணப்படுகிறார். அவரின் அருகில் இருந்த கனிமொழி, ராசாத்திக்கு ஆறுதல் கூறியபடி உள்ளார். கட்சியின் மூத்த தலைவர்களும் கருணாநிதி உடல் நலம் குறித்து நல்ல தகவல்களையே தெரிவித்தனர். விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என்றனர். 

காவேரி மருத்துவமனையில் இன்றும் தொண்டர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அனைத்து மீடியாக்களும் கருணாநிதியின் அடுத்த அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர்.’’  Trending Articles

Sponsored