`ஆலை தொடங்க அனுமதிக்காதீங்க’ - கலங்கிய குடிநீருடன் கலெக்டரிடம் மாற்றுத்திறனாளி மனுSponsoredசிப்காட்டில் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் மாசுபடுவதாகக் கூறி மாவட்ட கலெக்டரிடம் மாற்றுத்திறனாளி ஒருவர் தன் கழுத்தில் கலங்கிய தண்ணீர் பாட்டில்களைத் தொங்கவிட்டபடி மனு கொடுக்க வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் பழயை நகர் பச்சைக்குப்பம் பகுதியில் சிப்காட்டில் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற்சாலைக் கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்து குடிநீர் முழுவதும் பாதிக்கப்பட்டு மஞ்சள் கலரில் பழுப்பாக விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், காற்றும் மாசுபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், கால்நடைகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், இப்பகுதியில் புதிதாக மேலும் 3 தொழிற்சாலைகள் ஆரம்பிக்க  உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் சந்தோஷ், மாசுபட்ட குடி நீர் பாட்டில்களைத் தன் கழுத்தில் மாலைபோல் அணிவித்து வந்து மாவட்டக் கலெக்டர் தண்டபாணியிடம், புதிய தொழிற்சாலைகள் அமைக்க அனுமதியளிக்கக் கூடாது என்று மனு அளித்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி பச்சைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் மாசு கலந்த குடிநீர் பாட்டிலுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored