`ஒரு தடவையாவது பார்த்துட்டுப் போறேன்..!’ -  88 வயதில் மருத்துவமனை வாசலில் தவிக்கும் நெல்லை மூதாட்டிSponsoredதி.மு.க தலைவர் கருணாநிதியைப் பார்க்க தமிழகம் முழுவதிலுமிருந்து தொண்டர்கள் காவேரி மருத்துவமனை வாசலில் குவிந்து வருகின்றனர். 


 

கருணாநிதியின் உடல்நிலையில் நேற்றிரவு தற்காலிகப் பின்னடைவு ஏற்பட்டதாகவும், பின்னர் சீராகிவிட்டதாகவும் காவேரி மருத்துவமனை நேற்றிரவு அறிக்கை வெளியிட்டது.  இதனால், நேற்றிரவு முதலே தி.மு.க தொண்டர்கள் காவேரி மருத்துவமனை இருக்கும் ஆழ்வார்பேட்டைக்கு வரத் தொடங்கிவிட்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகிறது காவல்துறை. ஒருபுறம்  இளம் தி.மு.க தொண்டர்கள், `கருணாநிதி மீண்டு வருவார்’ என்று கோஷமிட்டு வர, மற்றொரு புறம்  தாய்மார்கள் கண்ணீருடன் அமர்ந்திருக்கிறார்கள். 

Sponsored 

Sponsored


சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் இருந்து பெண்களும் ஆண்களும் வந்தவண்ணம் உள்ளனர். கடந்த 27ம் தேதி, திருக்குவளையைச் சேர்ந்த 85 வயது ரத்தினம் என்கிற மூதாட்டி, கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேள்விப்பட்டதும் பஸ் ஏறி சென்னை வந்துவிட்டார். அவரை சமாதானப்படுத்தி தி.மு.க தொண்டர்கள் அனுப்பிவைத்தனர். அதேபோன்று, இன்று  கருணாநிதியின் உடல்நிலைகுறித்து விசாரிப்பதற்காக நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் இருந்து செல்லம்மா என்ற 88 வயது மூதாட்டி தனியாக சென்னை வந்துள்ளார். காவேரி மருத்துவமனை எங்கே இருக்கிறது என்று விசாரித்து, மருத்துவமனை வந்து சேர்ந்தார்.  


 

இன்று காலை அவரைப் பார்த்த தி.மு.க தொண்டர்கள், நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள் என்று விசாரித்துள்ளனர். என் பெயர் செல்லம்மாள். நான் அம்பாசமுத்திரத்திலிருந்து வரேன். தலைவர பார்க்கணும்...’ என்று கண்ணீர் சிந்தியுள்ளார். கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. யாரும் பார்க்க முடியாது’ என்று தொண்டர்கள் புரியவைத்துள்ளனர். ஆனாலும் அவர், மருத்துவமனை வளாகத்தை விட்டு நகரவேயில்லை.


 

இதையடுத்து, அவரை ஆ.ராசாவிடம் அழைத்துச்சென்றுள்ளனர். ‘தலைவர் நலமாக உள்ளார். கவலைப்பட வேண்டாம்’ என்று ராசா தெரிவித்ததை அடுத்து, அந்த இடத்திலிருந்து சென்றிருக்கிறார். காவேரி மருத்துவமனை வாசலில் ரத்தினம், செல்லம்மாள் மட்டுமில்லை.. அவர்களைப் போன்று தாய்மார்கள் பலர்   `தலைவரை ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டோமா?’ என்ற தவிப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.  Trending Articles

Sponsored