டச்சுப் படையை வீழ்த்திய திருவிதாங்கூர் சமஸ்தானம்..! நினைவு வெற்றித்தூணுக்கு நாளை ராணுவ மரியாதைடச்சுப்படையைத் தோற்கடித்த திருவிதாங்கூர் படையின் நினைவாக குளச்சலில் நிறுவப்பட்ட வெற்றித்தூணுக்கு நாளை துப்பாக்கித் தோட்டாக்கள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட உள்ளது.

Sponsored


கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தான ஆளுகைக்குள் இருந்த காலத்தில், 1741-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி டச்சு கப்பல்படை, தளபதி டிலனாய் தலைமையில் துப்பாக்கி போன்ற நவீன ஆயுதங்கள் தாங்கி குளச்சல் நோக்கி வந்தனர். திருவிதாங்கூர் படையினர், மாட்டுவண்டிகளைக் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி, அதன்மீது பனைமரத் துண்டுகளை வைத்தார்கள். இது, கப்பலிலிருந்து பார்ப்பவர்களுக்குப் பீரங்கி போன்று காட்சியளித்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் பீரங்கிப்படை இருக்கிறதோ எனத் தயங்கியபடி கடலில் நீண்ட நாள்கள் நங்கூரமிட்டு நின்றது டச்சுப்படை. டச்சுப்படையைச் சீர்குலைக்கும் வகையில், குளச்சல் மக்கள் உதவியுடன் கடலில் நீந்திச்சென்று கப்பல்களில் ஓட்டைபோட்டு மூழ்கடித்தனர். இறுதிக்கட்டமாக, குளச்சல் கடற்கரையில் போர் நடந்தது.  அதில், திருவிதாங்கூர் சமஸ்தான படை, டச்சுப்படையை வெற்றிகொண்டது.

Sponsored


Sponsored


படைத் தளபதி டிலனாய், 1741-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி சரணடைந்தார். ஆசியக் கண்டத்தில் முதன் முறையாக டச்சு ராணுவத்தைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடிய திருவிதாங்கூர் ராணுவத்தின் நினைவைப் போற்றும்விதமாக குளச்சலில் வெற்றித்தூண் அமைக்கப்பட்டுள்ளது. வெற்றித்தூண் நிறுவப்பட்ட 277-வது ஆண்டை முன்னிடு, நாளை காலை துப்பாக்கித் தோட்டாக்கள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்படுகிறது. இதற்காக, திருவிதாங்கூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் 19-ம் பட்டாலியன் வீரர்கள் குளச்சல் வந்துள்ளனர். நாளை காலை 10.15 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி, 11.30 மணிவரை நடைபெறும். துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வெற்றித்தூணுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.Trending Articles

Sponsored