Sponsored
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்தது பாராட்டுக்குரியது எனக் கமல் தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலிவு காரணமாகச் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவரின் உடல்நலம் குறித்து பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் காவேரி மருத்துவமனைக்குச் சென்று மு.க.ஸ்டாலினிடம் விசாரித்து வருகின்றனர். அதேபோல பல்வேறு மாநில முதல்வர்கள் தொலைபேசி மூலம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனர். கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை சார்பில் அவ்வப்போது அறிக்கை வெளியிடப்படுகிறது. இதனிடையே நேற்றிரவு சேலத்திலிருந்து சென்னை திரும்பினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நேற்றிரவே முதல்வர், காவேரி மருத்துவமனைக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் செல்லவில்லை. இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். இந்நிலையில் இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள, மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், 'முதல்வர் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்த அரசியல் மாண்பு பாராட்டுதலுக்குரியது. கருணாநிதி நலம் பெற வேண்டும் என்பதுதான் எல்லோரையும்போல என் ஆசையும்' என்று தெரிவித்துள்ளார்.
Sponsored
Sponsored
Trending Articles
இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..! சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat
இஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்?- டி.ராஜேந்தர் விளக்கம்
`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்!'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை
Sponsored