புது பைக் வாங்கிய 2 மாதங்களில் கள்ளச்சாவியைப் போட்டு திருட முயன்ற திருடர்கள்Sponsoredசென்னையில் புது பைக் வாங்கிய இரண்டு மாதங்களில் கள்ளச்சாவியைப் போட்டு திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 

சென்னை ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புதிய பைக் ஒன்றை வாங்கினார். நேற்று அந்தப் பைக்கை வீட்டின் வெளியில் நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் அந்தப் பைக்கை மூன்று வாலிபர்கள் எடுக்க முயன்றனர். அதைப்பார்த்த அந்தப் பகுதி மக்கள் வாலிபர்களிடம் விசாரித்தனர். அப்போது, மூன்று பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மின்சாரம் தடைப்பட்டிருந்ததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் வாலிபர்களைப் பொதுமக்கள் விரட்டினர். அதில் இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒரு வாலிபர் மட்டும் மாடியில் பதுங்கினார். அவரை டார்ச் லைட் வெளிச்சத்தில் பொதுமக்கள் பிடித்தனர். பிறகு, அவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். அதையடுத்து பிடிபட்ட வாலிபரை நீலாங்கரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 

போலீஸார் விசாரித்ததில் பைக்கைத் திருடிய வாலிபர் அருண் என்று தெரிந்தது. அவருக்கு பெத்தேல் நகர், 6 வது தெரு என்று தெரிந்தது. தொடர்ந்து அவருடன் வந்த இரண்டு பேர் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored