20 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவு வெளியானது..!Sponsoredதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4-க்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி ஒருங்கிணைந்த குடிமையியல் பணிகள் தேர்வு என்று அழைக்கப்படும் குருப் 4 போட்டித் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் எழுதினார்கள். இன்று அதற்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

Sponsored


இந்தத் தேர்வில், இளநிலை உதவியாளர் பணிக்கு 4,096 பணியிடங்களும் வி.ஏ.ஓ பணிக்கு 494 பணியிடங்களும் உள்ளிட்ட மொத்தம் 9,351 பணியிடங்களுக்கு, தேர்வானவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் டி.என்.பி.எஸ்.சி இணையத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in.என்ற இணையத்தில் பார்த்துக் கொள்ளலாம். இந்த ஆண்டு முதன்முறையாக வி.ஏ.ஓ பணியிடங்களுக்கும் குரூப் 4 தேர்வுடன் இணைத்து தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored