பாப்பம்மாளுக்கு நிரந்தரப் பணி; பணி மாறுதல் செய்த அதிகாரிமீது எப்.ஐ.ஆர்..! தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவுSponsoredஅவினாசியில் பள்ளி சத்துணவு சமையலர் பாப்பம்மாளுக்கு நிரந்தர பணி வழங்க டெல்லி தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வசித்து வருபவர் பழனிசாமி. இவரின் மனைவி பாப்பம்மாள் (42). அப்பகுதியில் உள்ள திருமலைக் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சமீபத்தில் சத்துணவு ஊழியராகப் பணியிட மாற்றம் பெற்று வந்தார். இவர், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இப்பள்ளியில் படிக்கும் மாற்று சமூக மாணவர்களுடைய பெற்றோர்கள், அவரை சத்துணவு சமைக்க விடாமல் தடுத்து நிறுத்தியதோடு, பள்ளி வளாகத்தைப் பூட்டி கடும் எதிர்ப்பும் தெரிவித்தார்கள். அதிகாரிகளும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, சத்துணவு ஊழியர் பாப்பம்மாளை, அவர் இதற்கு முன்பு பணியாற்றிய பள்ளிக்கூடத்துக்கே சென்றுவிடுமாறு உத்தரவிட்டார்கள். இதையடுத்து அவர் பணி மாறுதல் செய்யப்பட்டார்.

Sponsored


Sponsored


இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி இந்தப் பிரச்னை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் 3 நாள்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது. மேலும், இந்தப் பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் இன்று ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற விசாரணையில், 'திருப்பூர் சத்துணவு சமையலர் பாப்பம்மாளுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். அவரை பணி மாறுதல் செய்து தமிழக அரசு பிறப்பித்த ஆணை ரத்து செய்யப்பட வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அவருக்கு பணியிட மாறுதல் வழங்கிய அதிகாரிமீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்' என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


 Trending Articles

Sponsored