`கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது’ - ஸ்டாலின் பேட்டி!Sponsoredதி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல்நலிவு ஏற்பட்டுள்ளதாகக் காவேரி மருத்துவமனை சார்பில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, பல்வேறு கட்சியினரும் தி.மு.க தலைவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க கோபாலபுரம் நோக்கி படையெடுத்தனர். கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய கோபாலபுரத்தைச் சுற்றி அதிக அளவில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் திடீரெனக் குறைந்ததால், அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டபின், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ரத்த அழுத்தம் சீராக உள்ளது எனக் கூறி அறிக்கை வெளியிடப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அரசியல் கட்சித்தலைவர்களும் திரையுலகினரும் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விசாரித்து வருகின்றனர்.

Sponsored


Sponsored


அதேபோல, அண்டை மாநில முதலமைச்சர்களும் நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அவ்வப்போது காவிரி மருத்துவமனை சார்பில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருணாநிதியின் உடல் நலம் குறித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், `நேற்று காவேரி மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையின்படி கருணாநிதியின் உடல்நிலை சீராக இருக்கிறது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் கருணாநிதி இருந்துவருகிறார்' என்றார். இதே போல, தி.மு.க முதன்மை செயலாளர், துரைமுருகன் பேசுகையில் `நேற்று இருந்த நிலையிலேயே கருணாநிதியின் உடல்நிலை நீடிக்கிறது. தொண்டர்கள் அச்சப்படத் தேவையில்லை' என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். இருவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.


 Trending Articles

Sponsored