இந்தியாவின் முதல் புல்லட் ரயில் - என்னென்ன வசதிகள்?Sponsoredவரும் 2023-ம் ஆண்டில் தனது பயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரயிலின் வடிவமைப்பைத் தேசிய அதிவிரைவு ரயில் கார்ப்பரேஷன் (National High Speed Rail Corporation (NHSRC)) இறுதிசெய்துள்ளது. தற்போதைய ரயில்வண்டியில், ஒரு கோச்சிற்கு நான்கு ஆண்/பெண் பொதுக்கழிப்பறைகள் உள்ளன. வரவுள்ள புல்லட் ரயிலில் முதன்முறையாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வடிவமைப்புடன்கூடிய கழிப்பறை வசதி அமைய உள்ளது. இங்கு, வீல் சேர் வசதியும் உண்டு. 

அதேபோல, உடை மாற்றும் அறை மற்றும் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்குத் தனி அறை, குழந்தைகளுக்காக சிறிய அளவிலான கழிப்பறை, டயபரைக் கழிக்க குப்பைத்தொட்டி, குழந்தைகள் கைகழுவுவதற்கு ஏற்றவகையில் குறைந்த உயரத்திலான ஸின்க் ஆகியவை முதன்முறையாக அந்த புல்லட் ரயிலில் வடிவமைக்கப்பட உள்ளன. மேலும், அந்த ரயிலில் ஃப்ரீசர் வசதி, சூடுபடுத்தும் வசதியும் உள்ளன. காபி, டீ, வெந்நீர் தயாரிக்கவும் வசதிகள் உள்ளன. அந்த ரயில் சென்றுகொண்டிருக்கும் ரயில் நிலையங்கள் குறித்த தகவல்களைக் காட்டும் எல்.சி.டி திரை வசதி உள்ளது. 

Sponsored


ஒவ்வொரு ரயிலிலும் 55 பிசினஸ் கிளாஸ் இருக்கைகளும், 695 இருக்கைகள் குறிப்பிட்ட தரத்துடனும் இருக்கும். ஒவ்வொரு இருக்கையிலும் லக்கேஜ் வைப்பதற்கான இடமும், தலைசாய்க்கும் வசதியை அட்ஜஸ்ட் செய்யும்விதமாகவும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த புல்லட் ட்ரெயின், மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடைப்பட்ட 508 கி.மீ இடத்தை இரண்டு மணி நேரத்தில் சென்றடையும்படி அதிவேகத்துடன் இயங்கக்கூடியது. இந்த வசதிகளையெல்லாம் பார்க்கும்போது, இப்பவே அந்த புல்லட் ரயிலில் பயணிக்கணும்னு ஆசையாக உள்ளதா?

Sponsored
Trending Articles

Sponsored