பட்ஜெட்டை நிறைவேற்ற நாளை கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை!Sponsoredமூன்று பா.ஜ.க நியமன சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரவைக்குள் அனுமதித்து, நிதி மசோதாவைத் தாக்கல்செய்யலாம் என்ற நிபந்தனையுடன், கிரண்பேடி நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தார். இதையடுத்து, நாளை தொடங்க உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் பட்ஜெட் நிறைவேற்றப்பட உள்ளது.

புதுச்சேரியில், 2018-19 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் கடந்த 2-ம் தேதி தாக்கல் செய்தார். பின்னர், 19-ம் தேதி வரை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், அனைத்து துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று முடிவடைந்த நிலையில், நிதி மசோதாவுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காததால், பேரவையை சபாநாயகர் வைத்திலிங்கம் காலவரையின்றி ஒத்திவைத்தார்.

பேரவையில் பட்ஜெட் நிறைவேற்றப்படாததால், அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளம் போட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அப்போது தெரிவித்தார் சபாநாயகர் வைத்திலிங்கம். இந்நிலையில், மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நியமித்த மூன்று பா.ஜ.க நியமன சட்டமன்ற உறுப்பினர்களை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பேரவைக்குள் அனுமதித்து, நிதி மசோதாவைத் தாக்கல்செய்யலாம் என்ற நிபந்தனையுடன் கிரண்பேடி நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தார்.  இந்நிலையில், நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டம் கூட உள்ளதாக சட்டப்பேரவைச் செயலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored