போட்டோஷாப் மூலம் வதந்தி! காவல்துறையில் கனிமொழி புகார்Sponsoredதி.மு.க எம்.பி., கனிமொழியின் ட்விட்டர் கணக்குபோன்று போலியாக போட்டோஷாப் செய்து, 'தவறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கனிமொழி சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டு, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய கனிமொழி, காவேரி மருத்துவமனையில் இருந்துவருகிறார். இதற்கிடையில், இந்து மதத்துக்கு எதிராக கனிமொழி ட்விட் செய்திருப்பதுபோன்று போட்டோஷாப்பில் செய்யப்பட்ட படங்கள், சமூக வலைதளங்களில் பரவிவந்தன. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கனிமொழி சார்பில் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர், வழக்கறிஞர் செல்வநாயகம் சென்னை உதவி ஆணையருக்கு புகார் அளித்துள்ளார்.

Sponsored


அதில், 'தமிழகம் முழுவதும் தொடர் சுற்றுப் பயணங்கள் செய்தும், அறிக்கைகள் மூலமாகவும், தி.மு.க-வின் கருத்துகளை ஓங்கி ஒலித்து தி.மு.க-வினரிடேயும், பொதுமக்களிடையேயும் கனிமொழி நன்மதிப்பைப் பெற்றுள்ளார். தற்போது, உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை இரவு பகலாக மருத்துவமனையிலிருந்து அவர் கவனித்துவருகிறார். இதற்கிடையில், கனிமொழியின் ட்விட்டர் கணக்குபோன்று போட்டோஷாப்பில் உருவாக்கி, 'அதில் அவர் இந்து மதத்துக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டது போன்ற கருத்துகளை  சிலர் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். தி.மு.க, நாத்திக கருத்துகளைத் தனது சித்தாந்தத்தில் கடைப்பிடிக்கிறது. ஆனால், அனைத்து மதத்தினரின் உணர்வுகளை மதிக்க அண்ணா, கருணாநிதியால் தி.மு.க-வினர் அனைவரும் பக்குவப்படுத்தப்பட்டுள்ளனர். அதை, கனிமொழி தன் அரசியல் வாழ்வில் பல தருணங்களில் வெளிப்படுத்திவருகிறார். அவர், எந்த மதத்துக்கும் எதிரி கிடையாது. மூட நம்பிக்கைக்கும் பழக்க வழக்கங்களுக்கும் மட்டுமே எதிரி. ஆகவே, கனிமொழி குறித்து அவதூறான கருத்துகளை இணையத்தில் பரப்புபவர்களைக் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored