அடிக்கடி விபத்து! - ஊட்டி- மேட்டுப்பாளையம் வரை சாலைகள் விரிவாக்கம்Sponsoredஊட்டி, குன்னுார், மேட்டுப்பாளையம் வரை சுமார் 54 கிலாே மீட்டர் தூரத்தில் 14 காெண்டை ஊசி வளைவுகள் அமைந்துள்ளன. மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்தச் சாலையில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த வழிப் பயணம் புதிய அனுபவமாக இருக்கும். இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனப் போக்குவரத்துக்கு ஏற்றவாறு சாலைகள் விரிவுபடுத்தப்படுவதில்லை என்பதால் இந்த வழியில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

\

அதேபோல, ஊட்டியிலிருந்து எல்லநள்ளி வரையும், குன்னூரிலிருந்து கல்லாறு வரையும் பள்ளத்தாக்குகளை ஒட்டி சாலை அமைந்திருப்பதாலும், ஒரு சில பகுதிகளில் ரோடு மிகவும் குறுகலாக அமைந்திருப்பதும், விபத்துகள் அதிகரிக்கக் காரணமாக உள்ளன. இந்நிலையில் ஊட்டி, மேட்டுப்பாளையம் வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.67 கோடி மதிப்பில் தார்ச்சாலை மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கியுள்ளன.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‛‛சாலை விரிவாக்கம் மற்றும் பராமரிப்புக்காக மேட்டுப்பாளையம் முதல் கல்லாறு வரையும் பர்லியாரிலிருந்து ஊட்டி வரையும் இரண்டு பகுதிகளாக ரூ.31 காேடி, ரூ.36 கோடி என ரூ. 67 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊட்டியிலிருந்து பர்லியார் வரை ஆங்காங்கே குறுகலாகவும் மண் சரிவு ஏற்படக்கூடிய சுமார் 20 கி.மீ பகுதிகளில், கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டு, சாலை விரிவுபடுத்தப்படும். அதேபாேல், தார் ராேடும் அமைக்கப்படும். இதுவரை 13 கி.மீ கான்கிரீட் ரிவீட்மென்ட் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் விரைந்து முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

ஊட்டியிலிருந்து குன்னுார் சென்ற அரசுப் பேருந்து கடந்த மாதம் கீழ் மந்தடா என்ற இடத்தில், பழுது காரணமாகவும் தடுப்புச் சுவர் இல்லாத காரணத்தாலும் சுமார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored