`குழப்பத்தை ஏற்படுத்தாதீங்க'- பா.ம.க.வினருக்கு தலைமை திடீர் எச்சரிக்கைSponsored``அறிவிக்கப்படாத பொறுப்புகளைப் போட்டு குழப்பம் ஏற்படுத்தக் கூடாது" என்று பா.ம.க-வினருக்கு கட்சியின் தலைமை திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பா.ம.க தலைவர் ஜி.கே.மணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சித்தலைமையால் அறிவிக்கப்படாத கட்சிப் பொறுப்புகளில் பலர் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு நோட்டீஸ், அழைப்பிதழ், பேனர் போன்றவைகளில் படம் போட்டுக்கொண்டு குழப்பம் விளைவிக்கின்றனர். உதாரணமாக சட்டமன்றத் தொகுதி செயலாளர், தலைவர், துணைச் செயலாளர், துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகள் எதுவும் கட்சியில் அறிவிக்கப்படவுமில்லை. நியமனம் செய்யப்படவும் இல்லை. 

Sponsored


அதைப்போல தொண்டர் அணி அளவிலும் எந்தப் பொறுப்புகளும் இல்லை. மேலும், மாநில துணைத் தலைவர் பொறுப்புகளுக்கு ராமதாஸிடம் நியமனக் கடிதம் பெறாமல் தாங்களே போட்டுக்கொண்டு குழப்பம் விளைவிக்காமல் தலைமையின் அறிவிப்புபடி செயல்பட வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored