கடனுக்கும் கடை இல்லாத இடங்களிலும் மது தாராளமாகக் கிடைக்கிறது! அதிர்ச்சி அறிக்கைSponsoredமிழகத்தில் மதுவிலக்கு வேண்டுமென்று தொடர்ந்து குரல் கொடுத்து, அதற்கான போராட்டத்தில் உயிர்நீத்த தியாகி சசிபெருமாளின் நினைவுதினமான இன்று, தமிழகத்தின் பெரும்பான்மையான சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாக உள்ள மதுவின் பாதிப்பு குறித்து மக்களிடம் நடத்தப்பட்ட  ஆய்வினை  'தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு' அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வினைப்பற்றி இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.சே. இராசன் நம்மிடம் பேசும்போது, ``தமிழகத்தில் மக்கள் பாதிக்கப்படக்கூடிய பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், முக்கியப் பிரச்னையாக இருப்பது மதுதான். மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மதுக்கடைகள் இல்லாத இடங்களில் கூட, மது விற்பனை நடைபெறுகிறது. கடனுக்கு மது விற்பனை செய்யப்படுவதால் அதிகமாக குடிக்கிறார்கள், அதே நேரம் தங்கள் வருமானத்தை முழுக்க இழக்கிறார்கள். இது அனைத்தையும் எங்கள் ஆய்வில் நேரில் கண்டோம். தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், சேலம், வேலூர், தூத்துக்குடி ஏழு மாவட்டங்களில் மதுவின் பாதிப்பு குறித்து விரிவான ஆய்வு நடத்தினோம், பாதிக்கப்பட்ட 3,500 குடும்பங்களிடம் கருத்துகளைப் பதிவு செய்துள்ளோம். 

Sponsored


ஆய்வின் முடிவில் எங்களுக்கு அதிர்ச்சியான தகவல்களே கிடைத்தன. அதில் முக்கியமானது என்னவென்றால்,  தினக்கூலித் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் போதைக்கு அடிமையாக இருக்கிறார்கள். மது போதைக்கு அடிமையானவர்களில் தினமும் 400 ரூபாய் வருமானம் பெறுகிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இதை வைத்து நிம்மதியான வாழ்க்கை வாழமுடியும் என்பதை அவர்கள்  உணராமல் உள்ளனர். தினமும் குடிப்பவர்களும், வாரம் இருமுறை குடிப்பவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். உள்ளூர் கடைகளில் மது விற்பனை செய்யப்படுவதை அறியமுடிகிறது. மற்ற போதைப் பொருள்களை விட மது குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மதுவால் மரணம் மற்றும் உடல்பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. 

Sponsored


தந்தையின் குடியால், வருமான இழப்பு ஏற்பட்டு, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குழந்தைகள்  வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. குடும்பத்தில் அமைதியின்மை, குடும்ப வன்முறை பெருகுகிறது என்பதை எங்கள் ஆய்வில் கண்டுகொண்டோம். இப்படியே போனால் தமிழக மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இத்தீமைக்கு எதிராக  எங்கள் கூட்டமைப்பு சார்பாக இந்த ஆய்வில் சில பரிந்துரைகளை முன் வைக்கிறோம், பூரண மதுவிலக்கு ஒன்றே இதற்குத் தீர்வு. அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டாலும்கூட, உடனடியாக பார்களை மூட வேண்டும். பிறகு படிப்படியாக கடைகளை மூட வேண்டும். போதையால் பாதிக்கப்பட்டவர்களில் மறுவாழ்வு சிகிச்சை பெற்றவர்களில் 19 சதவிகிதம் பேர் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டிருக்கிறார்கள்.

எனவே, மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழக முழுவதுமுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை, மறுவாழ்வு மையங்களாகவும் செயல்பட உத்தரவிட வேண்டும். விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு வழங்கப்படும் இழப்பீடுபோல மதுவினால் இறந்தவர்கள் குடும்பத்துக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். காரணம், மது அரசினால் விற்கப்படுகிறது. அதனால் அரசுக்கு அபரிமிதமான வருமானமும் கிடைக்கிறது.  குடியினால் இறந்தவர்கள் குடும்பத்து குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட சதவிகிதம் ஒதுக்க வேண்டும். மது குடிப்பவர்களால் பல குடும்பங்கள் நிம்மதிழியிழந்து பொருளாதாரம் இழந்து நிர்க்கதியாக உள்ளனர். அரசு மதுவிலக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மது விலக்குக்காக போராடி உயிர் நீத்த சசிபெருமாளின் தியாகத்தைப் போற்றும் வகையில் இன்று எங்கள் ஆய்வறிக்கையை வெளியிடுகிறோம்'' என்றார்.  Trending Articles

Sponsored