டச்சுப் படையை தீரமாக எதிர்த்து வென்ற திருவிதாங்கூர் வீரர்களை நினைவுகூர்ந்த ராணுவம்!



Sponsored



கப்பலில் படையெடுத்து வந்த டச்சுப்படையைத் தோற்கடித்து தலைமைதாங்கி வந்த தளபதியைச் சிறைபிடித்த திருவிதாங்கூர் படையின் வீரத்தைப் போற்றும்விதமாகக் குளச்சலில் அமைக்கப்பட்டுள்ள வெற்றித் தூணுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.

திருவிதாங்கூர் சமஸ்தான ஆளுகைக்குள் கன்னியாகுமரி மாவட்டம் இருந்த காலத்தில் 1741-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி டச்சு கப்பல்படை தளபதி டிலனாய் தலைமையில் நவீன ஆயுதங்கள் தாங்கி குளச்சல் நோக்கி படையெடுத்து வந்தனர். திருவிதாங்கூர் படையினர் மாட்டு வண்டிகளைக் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி அதன்மீது பனை மரத்துண்டுகளை வைத்தார்கள். இது கப்பலிலிருந்து பார்ப்பவர்களுக்குப் பீரங்கி போன்று காட்சியளித்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் பீரங்கிப்படை இருக்கிறதோ எனத் தயங்கியபடி கடலில் நீண்ட நாள்கள் நங்கூரமிட்டு நின்றது டச்சுப்படை. டச்சுப்படையைச் சீர்குலைக்கும் வகையில் குளச்சல் மக்கள் உதவியுடன் கடலில் நீந்திச்சென்று கப்பல்களில் ஓட்டைபோட்டு மூழ்கடித்தனர். இறுதிக்கட்டமாகக் குளச்சல் கடற்கரையில் போர் நடந்தது. இதில் திருவிதாங்கூர் சமஸ்தான படை, டச்சுப்படையை வெற்றி கொண்டது.

Sponsored


Sponsored


டச்சுப் படைத் தளபதி டிலனாய் 1741-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி சரணடைந்தார். ஆசிய கண்டத்தில் முதன் முறையாக டச்சு ராணுவத்தைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடிய திருவிதாங்கூர் ராணுவத்தின் நினைவை போற்றும் விதமாகக் குளச்சலில் வெற்றித்தூண் அமைக்கப்பட்டுள்ளது. வெற்றித் தூண் நிறுவப்பட்ட 277-வது ஆண்டை முன்னிட்டு திருவனந்தபுரம் மெட்ராஸ் ரெஜிமென்ட் 19-ம் பட்டாலியன் வீரர்கள் இன்று வீர வணக்கம் செலுத்தினர். ரெஜிமென்ட் கமெண்டிங் ஆபீஸர் கர்னல் தினேஷ் சிங் தன்வார், குமரி எஸ்.பி.ஸ்ரீநாத், சப் கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து வெற்றித் தூணுக்கு மரியாதை செலுத்தினர்.



Trending Articles

Sponsored