`இந்திய அரசியலின் மூத்த தலைவர் கருணாநிதி!' - ரஜினி புகழாரம்Sponsoredதி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனைக்குச் சென்று நேரில் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

வயது முதிர்வு காரணமாகக் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஓய்வெடுத்து வந்த தி.மு.க தலைவர் கருணாநிதி, திடீர் ரத்த அழுத்தக் குறைவு காரணமாகச் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 28-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விசாரித்து வருகின்றனர். அதேபோல திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் காவேரி மருத்துவமனைக்குச் சென்று மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து ஸ்டாலினிடன் கருணாநிதியின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். 

Sponsored


இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும், படத்தின் படப்பிடிப்பு டேராடூனில் நடைபெற்று வருகிறது. அவர் சென்னை திரும்பியதும் கருணாநிதியை நலம் விசாரிப்பார் எனத் தகவல் வெளியானது. இன்று சென்னை திரும்பிய அவர், காவேரி மருத்துவமனைக்கு இரவு 8.45 மணிக்குச் சென்றார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ``கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோரிடம் கேட்டறிந்தேன். இந்திய அரசியலின் மூத்த தலைவர் கருணாநிதி. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன்’’ என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored