இரானில் சிறைப்பிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்புகிறார்கள்! - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்Sponsoredஇரான் நாட்டு கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இரண்டு கட்டமாக தமிழகம் வருவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் துபாய் நாட்டில் முகமது ஷால்லா என்பவரின் விசைப்படகில் ஆழ் கடல் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் இரான் கடற்படையால் கைது செய்யப்பட்டு மருத்துவ வசதி, உணவின்றி தவித்து வருவதாக செய்தி அறிந்தேன். இரானில் சபகார் துறைமுகப் பணி நிமித்தப் பயணம் சென்றபோது, இரான் அதிகாரிகளைச் சந்தித்து 21 மீனவர்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் இந்திய தூதரகத்தால் செய்து கொடுக்கப்பட்டன. மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மூலமும் மீனவர்களை விடுவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக முதல் கட்டமாக ரபேல் ஜோசப், ஏசு அந்தோணி அஜில்டன், பிரான்சிஸ் ஏசுதாசன், அந்தோணி இக்னேஷி அந்தோணி சந்தியாகு ராயப்பன், தாசன் சேவியர் ஜெபமாலா, மரியஜான் சகாய மிக்கேல் பார்த்திபன், அந்தோணி ராயப்பன் மரிய ஜோசப் கென்னடி, திபூர்சியான் கோஷ்தா விக்டர் மற்றும் விக்டர் ரூபிஸ் ஆகிய 9 பேர் ஆகஸ்ட் 3-ம் தேதி புறப்பட்டு 4-ம் தேதி சென்னை வந்தடைவர். மீதமுள்ள 12 பேர் ஆகஸ்ட் 5-ம் தேதி புறப்பட்டு தாயகம் திரும்புவர். இதற்கான ஏற்பாடுகளை இரானில் உள்ள இந்தியத் தூதரகம் செய்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sponsored


Sponsored


இவ்விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை 19-ம் தேதி தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, இரானில் சிக்கித்தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்களையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார்.இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா உறுதி அளித்திருந்தார். Trending Articles

Sponsored